aruvisivakarthikeyan

நன்கு உருவாக்கப்பட்டுள்ளது ‘அருவி’ திரைப்படம்! – சிவகார்த்திகேயன்


அனைத்து உணர்ச்சிகளுடனும் நன்கு உருவாக்கப்பட்டுள்ளது ‘அருவி’ திரைப்படம் என்று சிவகார்த்திகேயன் புகழாரம் சூட்டியுள்ளார்.

சமூகப் பிரச்சினைகளை ஒரு பெண்ணின் பார்வையில் கூறும் ’அருவி’ படத்தை இயக்கி இருக்கிறார் புதுமுக இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன். முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்தை விரைவில் வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது. எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கிறார்.

இப்படத்தை பல்வேறு திரையுலக பிரபலங்களுக்கு திரையிட்டு காட்டிவருகிறது படக்குழு. சமீபத்தில் இப்படத்தைப் பார்த்த சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

‘அருவி’ படத்தின் சிறப்புத் திரையிடல் பார்த்தேன், ஒரு அணியாகத் திரண்டு அபாரமாகச் செயல்பட்டுள்ளனர். அனைத்து உணர்ச்சிகளுடனும் கூடிய நன்கு உருவாக்கப்பட்ட திரைப்படம்.. நடிகர்கள்த தேர்வு, நடிப்பு பிரமாதம்.. குறிப்பாக முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை அதிதி பாலன் சிறப்பு.. இந்தப் படம் விரைவில் வெள்ளித்திரைக்கு வரவுள்ளது, இதனை திரையரங்குகளில் சென்று கண்டு மகிழுங்கள், திறமை வாய்ந்த இந்த இளம் குழுவுக்கு ஆதரவு அளியுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.