
விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியதைத் தொடர்ந்து, ‘மெர்சல்’ படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் முடிவுக்கு வந்தது.
கேளிக்கை வரி குறைப்பு, திரையரங்க டிக்கெட் கட்டணம் உள்ளிட்ட பிரச்சினை முடிவுற்றதால் ‘மெர்சல்’ வெளியீடு உறுதிசெய்யப்பட்டது. ஆனால், தணிக்கைக் குழுவினருக்கு விலங்குகள் நல வாரியத்தின் கடிதத்தால் ‘மெர்சல்’ மீண்டும் வெளியீட்டு பிரச்சினையில் சிக்கியது. இதனால் முன்னணி திரையரங்குகள் எதிலுமே ‘மெர்சல்’ டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படாமல் உள்ளது.