201710191724239907_Prince-William-Princess-Kate-reveal-3rd-child-due-in-April_SECVPF

இளவரசி கேத் மிடில்டனுக்கு ஏப்ரல் மாதம் 3-வது குழந்தை பிறக்கும்!


இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் – இளவரசி கேத் மிடில்டன் தம்பதிக்கு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 3-வது குழந்தை பிறக்கும் என  வைத்தியர்கள்  தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து இளவரசர் சார்லசின் மகனான வில்லியம்ஸ் – இளவரசி கேத் மிடில்டன் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் என 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் அவருக்கு அடுத்த ஆண்டு (2018) ஏப்ரலில் குழந்தை பிறக்கும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.  அதுகுறித்து கென்சிங்டன் அரச மாளிகை அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் பிறக்க இருக்கும் குழந்தை இங்கிலாந்து அரச குடும்பத்தின் முடி சூட்டும் வரிசையில் 5-வது இடத்தில் உள்ளது.