201710221538285828_Mahindra-planning-GenZe-electric-scooter-for-India_SECVPF

விரைவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியிடும் மஹேந்திரா!


இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட மஹேந்திரா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் மஹேந்திரா நிறுவனம் ஜென்ஸீ மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹேந்திரா நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து அந்நிறுவனம் மஹேந்திரா ஜென்ஸீ (GenZe) மாடலை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. தற்சமயம் வட அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் மஹேந்திரா ஜென்ஸீ மாடல் 1.6 கிலோவாட் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இந்த பேட்டரி 3.5 மணி நேரத்திலேயே முழுமையாக சார்ஜ் ஆகிவிடும்.

இதன் எலெக்ட்ரிக் மோட்டார் மணிக்கு 48 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. 48 கிலோமீட்டர் வரை செல்லும் இந்த ஸ்கூட்டர் 10 நொடிகளில் முழு வேகத்தில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 105.5 கிலோகிராம் எடை கொண்டிருக்கும் ஜென்ஸீ 133 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டுள்ளது.

ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங், இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக், ஸ்போர்ட் மோட், எகனாமி மோட், ஈசி மோட் மற்றும் கஸ்டம் மோட் என நான்கு டிரைவிங் மோட்களை கொண்டுள்ளது. இத்துடன் வாகனத்தில் உள்ள அனைத்து விளக்குகளும் எல்இடி வகையை சேர்ந்தது ஆகும். மேலும் எல்இடி டச் ஸ்கிரீன் மானிட்டர் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மானிட்டர் வாகனம் குறித்த தகவல்களை பார்க்க முடிவதோடு, அவற்றை கிளவுட் ஸ்டோரேஜில் இருந்து டவுன்லோடு செய்யவும் முடியும். அமெரிக்காவில் ஜென்ஸீ 2.0 விலை 3000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 2 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எனினும் இந்திய சந்தையில் இத்தகைய விலையில் விற்பனை செய்ய முடியாது என்பதால் ஜென்ஸீ இந்திய பதிப்பில் அதிகப்படியான மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மொத்த பேட்டரி அமைப்பு இந்திய சூழல்களுக்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும், இத்துடன் இதன் வேகமும் அதிகப்படுத்தலாம் என கூறப்படுகிறது.