201710260532138498_Kenya-opposition-leader-urges-vote-boycott-civil_SECVPF

கென்யாவில் அரசியல் குழப்பம்!


கென்யா நாட்டில் கடந்த ஆகஸ்டு மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் அதிபர் உஹூரு கென்யட்டா வெற்றி பெற்றார். ஆனால் அந்த தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி, உஹூரு கென்யட்டா வெற்றி பெற்றது செல்லாது என மேல் நீதிமன்றம்  அறிவித்தது.

இதனால் அரசியல் குழப்பம் உருவானது. இதையடுத்து இன்று (26-ந் திகதி) மறு தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தேர்தலை புறக்கணிக்கப்போவதாக எதிர்க்கட்சி தலைவர் ரைலா ஒடிங்கா அறிவித்தார்.

இதற்கிடையே இந்த தேர்தலுக்கான ஆயத்த வேலைகளை தேர்தல் வாரியம் சரியாக செய்து முடிக்கவில்லை என்பதால் தேர்தலை இப்போது நடத்தாமல் தாமதப்படுத்த வேண்டும் என்று கூறி, மனித உரிமைகள் ஆர்வலர் கெலிப் கலிபா என்பவர்  மேல் நீதிமன்றில் வழக்கு தொடுத்தார்.

அந்த வழக்கை மேல் நீதிமன்றம்  நேற்று விசாரிக்க தயாரானபோது, மேல் நீதிமன்றத்திற்கு  காவல் துறையினர் திடீரென ‘சீல்’ வைத்தனர். மேல் நீதிமன்றம்  அமைந்துள்ள சாலையில் யாரும் நுழைய முடியாதபடிக்கு தடுப்பு வேலிகளை காவல் துறையினர் அமைத்துள்ளனர். அங்கு கலவர தடுப்பு காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.