201710261547462745_Kawasaki-Ninja-400-Unveiled-at-2017-Tokyo-Motor-Show_SECVPF

பஜாஜ் டாமினருக்கு போட்டியாக கவாசகி நின்ஜா 400 அறிமுகம்


பஜாஜ் டாமினர் மாடலுக்கு போட்டியாக கவாசகி நிறுவனத்தின் புதிய நின்ஜா 400 மாடல் பைக் டோக்கியாவில் நடைபெறும் மோபஜாஜ் டாமினர் மாடலுக்கு போட்டியாக கவாசகி நிறுவனத்தின் புதிய நின்ஜா 400 மாடல் பைக் டோக்கியாவில் நடைபெறும் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கவாசகி நிறுவனத்தின் புதிய நின்ஜா 400 டோக்கியோவில் நடைபெறும் மோட்டார்விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய நின்ஜா 300 மாடலை விட எடை குறைவாகவும், அதிக செயல்திறன் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கவாசகி நின்ஜா 400 இந்தியாவில் 2018 ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய நின்ஜா 400 பேரலெல் டுவின் 399சிசி இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 44bhp @ 10,000rpm மற்றும் 38Nm டார்கியூ 8000rpm செயல்திறன் கொண்டுள்ளது. இதன் முந்தைய மாடலில் 38bhp மற்றும் 27Nm செயல்திறன் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

400சிசி மாடல்களில் மேம்படுத்தப்பட்ட லோ-என்ட் டார்கியூ, மென்மையான திராட்டிள் மற்றும் ஓட்டுநருக்கு ஏற்ற சவுகரியத்தை வழங்கும் புதிய நின்ஜா 400 தலைசிறந்த அனுபவத்தை வழங்கும். கவாசகி நின்ஜா 400 ஸ்டீல் டிரெலிஸ் ஃபிரேம் கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதால் முந்தைய நின்ஜா 300 மாடலை விட 6 கிலோ வரை எடை குறைவாக இருக்கிறது. புதிய நின்ஜா 400 எடை 168 கிலோ ஆகும்.

புதிய நின்ஜா 400 மாடலில் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டிருப்பதோடு, வடிவமைப்புகள் நின்ஜா H2 மாடலை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் சின்-ஸ்பாய்லர்கள் மற்றும் டுவின் எல்இடி ஹெட்லேம்ப்கள் இட்மபெற்றுள்ளது. இத்துடன் மோட்டார்சைக்கிளின் முன்பக்கம் 310 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக், நிசின் ABS வழங்கப்பட்டுள்ளது.

நின்ஜா 400 பெரிய உருவம் கொண்டிருப்பதால் பாதுகாப்பாகவும், ஓட்டுநருக்கு சவுகரியத்தையும் வழங்கும் படி இருக்கிறது. இதன் சீட் உயரம் 786 மில்லிமீட்டர் அளவில் வைக்கப்பட்டுள்ளது. மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக், லைம் கிரீன் மற்றும் எபோனி நிறங்களில் கிடைக்கிறது.