201710261812163912_Airport-security-footage-shows-4-men-also-suspected-in-Kim_SECVPF

வடகொரிய அதிபரின் சகோதரர் கொலை- 4 பேரை சந்தேகிக்கும் மலேசிய காவல் துறை


வடகொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜாங் நாம் கொல்லப்பட்டது தொடர்பாக ஏற்கனவே இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் நால்வரை சந்தேகப்பதாக மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.

வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங்கின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜாங்-நாம். இவர் கடந்த மாதம் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். விமான நிலையத்தில் அமர்ந்திருந்த அவரது முகத்தில் 2 பெண்கள் தடை செய்யப்பட்ட ‘வி எக்ஸ்’ என்ற கொடுமையான ரசாயன வி‌ஷப்பவுடரை வீசி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இக்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், இந்த கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பிருக்கலாம் என விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தேடப்பட்டுவரும் 4 ஆண்கள் கொலை நடந்த நேரத்தில் விமானநிலையத்தில் இருந்திருக்கலாம் என்பதால் விமானநிலைய சி.சி.டி.வி காட்சிகளை தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அதிகாரி கூறியுள்ளார். தேடப்பட்டு வரும் நால்வரும் வடகொரியர்களாக இருக்க வாய்ப்புள்ளதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.