Tamil_News_large_1868594_318_219

அழுக்கை ஆராதிக்கும் மூட்டைப் பூச்சி!


மூட்டைப் பூச்சிகள் அழுக்குத் துணிகளையே அதிகம் நாடுகின்றன. ஒரு அறையில் சுத்தமான துணிகள், இன்னொரு அறையில் அழுக்கான துணிகளை வைத்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், மூட்டைப் பூச்சிகள் அழுக்கான துணிகள் உள்ள அறையில் அதிகம் வந்து குவிந்ததாக, ‘சயன்டிபிக் ரிப்போர்ட்ஸ்’ இதழில் வெளியான ஆய்வு தெரிவிக்கிறது.

அழுக்குத் துணிகளில் மனித வாடை இருப்பதால் அவை ரத்தம் குடிக்கலாம் என்று வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். எனவே, சுத்தமான படுக்கை விரிப்புகள், சுத்தமான இரவு உடைகளை அணிந்தால் மூட்டைப் பூச்சிகளுக்கு அழைப்பு விடுப்பதை தவிர்க்கலாம்.