aani

மனநோயாளியின் வயிற்றில் 639 ஆணிகள்!


இந்தியாவில் கொல்கத்தாவில் மனநோயாளி ஒருவரின் வயிற்றில் இருந்து 639 ஆணிகளை வைத்தியர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். மேற்கு வங்காள மாநிலம் கோபர்க்தங்கா பகுதியைச் சேர்ந்த 48 வயதான மனநோயாளி ஒருவர் கடந்த சில தினங்களாக தொடர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

வைத்தியர்கள் அவரைப் பரிசோதனை செய்து பார்த்தபோது ஆணிகள் இருந்தமை தெரியவந்துள்ளது. குறித்த மன நோயாளி அடிக்கடி ஆணிகளை விழுங்கியுள்ளார். அந்த ஆணிகள் குடல் பகுதியில் தேங்கி உபாதைகளை ஏற்படுத்தியுள்ளன. இதையடுத்து அறுவைச் சிகிச்சை மூலம் அந்த ஆணிகள் அகற்றப்பட்டன.