Ajith-movie_SECVPF

அரசியலில் இறங்கமாட்டேன் – நடிகர் அஜித் தெரிவிப்பு!


அரசியல்; இறங்குவது தனக்குச் சரிப்பட்டு வராது என நடிகர் அஜித் தனது இரசிகர்களுக்குத் தெரிவித்துள்ளார். நடிகர்களான ரஜினி, கமல், விஜய் ஆகியோர் அரசியலுக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அஜித்தின் இரசிகர்கள் அவரிடம் அரசியல் வருகை தொடர்பாகக் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் படப்பிடிப்பு முடியும் வரை வேறு எந்தப் பணிக்கும் செல்லமாட்டார். அதேபோல் சினிமாதான் தொழில் என்பதால் நடிப்பை மட்டுமே தொழிலாக இன்றுவரை செய்து வருகிறார்.

மனம் போன போக்கில் எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் இருக்கும் நடிகர் அஜித்துக்கு அரசியல் பிடிக்காது என்பதை அவர் ஆரம்பத்திலிருந்தே வெளிப்படையாகத் தெரிவித்துவந்தமை குறிப்பிடத்தக்கது.