drams

அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை விசா செயற்றிட்டத்தை நிறுத்த முடிவு – ட்ரம்ப் அறிவிப்பு!


அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமையைப் பெறும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் குடியேற்றவாசிகள் விசா செயற்றிட்டம் நிறுத்தப்படவுள்ளது. நியூயோர்க் தாக்குதலின் எதிரொலியாக இந்நடவடிக்கையை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக புதன்கிழமை இடம் பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அவர் அங்கு உரையாற்றுகையில், அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமையைப் பெறும் வகையிலான குடியேற்றவாசிகள் விசா செயற்றிட்டத்தினை நிறுத்த நான் நடிவடிக்கை எடுக்கவுள்ளேன்.

பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக நமது நாட்டைத் தாக்க முயற்சித்து வருகின்ற நிலையில், குடியேற்றவாசிகளை நாட்டிற்குள் அனுமதிக்கும் இத்திட்டத்தை நிறுத்துவது தொடர்பில் அமெரிக்க காங்கிரஸில் உரையாற்றி வெகு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.