british defence minister

பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சர் பாலியல் குற்றச்சாட்டால் இராஜினாமா!


பிரிட்டன் பாராளுமன்றத்தில் பணியாற்றும் ஆண் மற்றும் பெண் ஊழியர்களிடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தவறாக நடந்து கொள்வதாகவும் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் ஏராளமான புகார்கள் வந்துள்ள நிலையில், இது தொடர்பான விசாரணையை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதமர் உத்தரவிட்டதையடுத்து, பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பாதுகாப்புத்துறை அமைச்சர் மைக்கேல் ஃபாலன் தனது பதவியை இராஜினா செய்துள்ளார்.

இராஜினாமாக் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியுள்ள மைக்கேல் ஃபாலன் அதில் அண்மைக் காலமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனது கடந்த கால நடத்தை மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் பல குற்றச்சாட்டுகள் தவறானவை. ஆனால், இராணுவத்துக்குத் தேவையான உயர்ந்த தர நிலைக்கு கீழ் எனது கடந்த கால செயற்பாடுகள் இருந்ததை நான் ஒப்புக்கொள்கிறேன். எனவே நான் எனது பதவியை இராஜினாமா செய்கிறேன் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இவர் 2002ஆம் ஆண்டு வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளினி ஒருவரின் முழங்காலினைத் தொட்டு சிலி;மிஷத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு அதற்காக மன்னிப்பு கோரியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.