fidel castro

கியூபா நாட்டின் தலைவர்களைக் கொல்வதற்குப் பேரம் பேசிய அமெரிக்கா


கியூபாவின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ, அவரின் சகோதரர் ராவுல் காஸ்ரோ மற்றும் சேகுவேரா ஆகியோரைக் கொல்வதற்கு அமெரிக்கா பேரம் பேசியுள்ளமை அம்பலமாகியுள்ளது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன்.எப்.கெனடி சுட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர்பான 2800 இரகசிய கோப்புளை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அண்மையில் வெளியிட்டார்.

பிடல் காஸ்ட்ரோ உள்ளிட்ட கியூபா நாட்டின் பல தலைவர்களைக் கொல்வதற்கு விலை நிர்ணயிக்கப்பட்டதாக ஒரு ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. அதில் பிடல் காஸ்ட்ரோவை கொல்வதற்கு ஒரு மில்லியன் டொலர், அவரது சகோதரர் ராவுல் காஸ்ரோ மற்றும் சேகுவேராவை கொல்வதற்கு தலா 20 ஆயிரம் டொலர் விலை நிர்ணயிக்கப்பட்டதாக அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் அமெரிக்கா தேசிய காப்பக இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.