catalonia2

ஸ்பெயின் அரசைக் கண்டித்துப் பொதுமக்கள் போராட்டம் – காட்டலோனியா தலைவர்களை விடுவிக்கக் கோரிக்கை


காட்டலோனியா சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்யப்பட்டதை அடுத்துக் கைது செய்யப்பட்ட முன்னாள் தலைலவர்களை விடுவிக்கக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ஸ்பெயின் நாட்டின் காட்டலோனியா மாகாணம் தன்னாட்சி உரிமை பெற்றது. அதற்கு சுதந்திரம் வழங்கும்படி எழுந்த கோரிக்கையால் கடந்த ஒக்டோபர் 1ஆம் திகதி பொது வாக்கெடுப்பு நடந்தது. அதில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு காட்டலோனியா சுதந்திரம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதை ஸ்பெயின் அரசு நிராகரித்ததோடு, முன்னாள் அமைச்சர்கள் பலரைக் கைது செய்து சிறையிலும் அடைத்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 30 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். ஸ்பெயின் அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரியும் காட்டலோனியா பாரளுமன்றம் உள்ள பார்சிலோனியாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.