trump-modi

மோடி – ட்ரம்ப் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு உறுதி


பயங்கரவாதத்தை எதிர்த்து இணைந்து போராட இந்தியப் பிரதமர் மோடியும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் உறுதி பூண்டுள்ளனர் என வெள்ளை மாளிகைச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நியூயோர்க் நகரின் கீழ் மேன்ஹாட்டன் பகுதியில் கடந்த 31 ஆம் திகதி பாதசாரிகள் மீது லொறியை ஏற்றிப் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு உலகத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு உயிரிழந்தவர்களுக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

அப்போதே அவர்கள் பயங்கரவாதத்தின் உலகலாவிய அச்சுறுத்தலை எதிர்த்து இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து போராட வேண்டும் என்று உறுதியேற்றுக் கொண்டுள்ளனர்.