catalonia2

தலைவர்கள் சிறையிலடைப்பு – ஸ்பெயின் அரசு அராஜகம்


நாட்டுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்ததாகத் தெரிவித்து காட்டலோனியாவில் வாக்கெடுப்பில் முக்கிய பங்காற்றிய எட்டுத் தலைவர்களை ஸ்பெயின் உயர் நீதிமன்றம் கைது செய்து சிறை வைத்துள்ளது. கலகம் செய்தல், தேசத் துரோகம் மற்றும் பொதுநிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள குறித்த காட்டலோனியத் தலைவர்கள் கடந்த வியாழக்கிழமை நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, பதவி நீக்கம் செய்யப்பட்ட காட்டலோனிய முன்னாள் ஜனாதிபதி கார்லெஸ் பூகிடமண்ட் மற்றும் நான்கு தலைவர்கள் நீதிமன்றம் அனுப்பிய அழைப்பாணையை நிராகரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விசாரைணை அரசியல் உள்நோக்கம் கொண்டது என தற்போது பெல்ஜியத்தில் தங்கியுள்ள கார்லெஸ் பூகிடமண்ட் விசனம் தெரிவித்துள்ளார்.