canada accident2

கனடா கோர விபத்தில் யாழ் புங்குடுதீவுப் பெண் பலி


கனடாவில் ரொரன்டோ பகுதியிலுள்ள யோர்க் பல்கலைக்கழகத்துக்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் தமிழ்ப் பெண்ணொருவர் பரிதாபமாகப் பலியாகியுள்ளார். புங்குடுதீவு 7 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த லோகநாதன் கலைச்செல்வி என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை வீதியில் இரண்டு வாகனங்கள்; ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. மேலும், கழுத்து மற்றும் பின் பகுதியில் பலத்த காயங்களுக்குள்ளான மற்றொருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.