Vietnam

வியட்நாமைப் புரட்டிப்போட்ட தாம்ரே சூறாவளி


வியட்நாமை தாம்ரே (Damrey) சூறாவளி தாக்கி;யுள்ளது. நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை தாக்கியுள்ள இச்சூறாவளியை அடுத்து 20 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 12 பேர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இந்தச் சூறாவளித் தாக்கம் காரணமாக 33 ஆயிரம் பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதுடன், 370 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இதேவேளை வியட்நாமில் மணிக்கு 90 கிலோ மீற்றர் வேகத்தில் வீசியுள்ள கடும் காற்று காரணமாக நூற்றுக் கணக்கான மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளதுடன், மரங்களும் வேரோடு பிடுங்கி எறியப்பட்டுள்ளன. ஆயிரக் கணக்கான வீடுகள் மற்றும் பொதுவிடங்களின் கூரைகள் காற்றில் அள்ளுண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.