gold kidnab women arrest_2016_11_6

துபாய் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு இலங்கையர்களுக்கு தலா 3 வருட சிறைத்தண்டனை


துபாயில் பாரிய கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ள ஆறு இலங்கையர்களுக்கு தலா 3 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 6ஆம் திகதி தாம் பணியாற்றும் நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட பணப்பொதிகளில் இருந்து, 1.198 மில்லியன் டினார் பணத்தை இவர்கள் கொள்ளையடித்துள்ளனர். 22 தொடக்கம் 29 வயதுக்கு உட்பட்ட இலங்கைக் காவலர்களே திட்டமிட்டு, இவ்வாறு கொள்ளையடித்துள்ளனர்.

தமக்குள் பிரித்துக்கொண்ட பணத்தின் பெரும் பகுதியை பணப்பரிமாற்ற நிலையங்கள் மூலம் தங்கள் வீடுகளுக்கு அனுப்ப முடிவு செய்துள்ள நிலையில், இவர்கள் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர். இதுவரை துபாய் குற்றவியல் நீதிமன்றத்தில் குறித்த 6 இலங்கையர்கள் தொடர்பில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது. அதற்கமைய அனைவருக்கும் தலா 3 வருட சிறைத் தண்டனையின் பின்னர் குற்றவாளிகளை நாடு கடத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.