us

அமெரிக்காவின் துப்பாக்கிக் கலாச்சாரம் – பத்து மாதங்களில் 13 ஆயிரம் பேர் பலி


அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் கடந்த பத்து மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 13,149 பேர்; உயிரிழந்துதுள்ளனர் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அங்கு இந்த ஆண்டில் மட்டும் சுமார் சுமார் 52,385 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 307 சம்பவங்கள் பெரியது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீவிரவாதத்தை விட அமெரிக்காவுக்குப் பெரிய தலைவலியைக் கொடுப்பது உள்நாட்டில் மக்களோடு மக்களாகக் கலந்திருக்கும் துப்பாக்கிகள்தான். அமெரிக்காவில் தங்களது பாதுகாப்புக்கு துப்பாக்கிகள் வைத்துக் கொள்ளலாம் என்கிறது சட்டம். ஆனால், அதே துப்பாக்கிகள் மற்றவர்களின் உயிரைக் குடிக்கும்போது, இதில் எங்கே இருக்கிறது பாதுகாப்பு என்ற கேள்வி எழாமல் இல்லை. துப்பாக்கிக் கலாசாரம் என்ற வார்த்தையை உலகிற்கு நல்கிய அமெரிக்காவில் யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வைத்திருக்கலாம் என்ற நிலை இருக்கும் வரை இந்த ஆயுதப் பசிக்கு முடிவு என்பது இல்லை என்பதைச் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.