mediteranian sea 26 died

மத்திய தரைக்கடலில் 26 இளம் பெண்களின் சடலங்கள் மீட்பு


மத்திய தரைக்கடலில் இத்தாலி அதிகாரிகள் மேற்கொண்ட மீட்புப் பணியின்போது 14 முதல் 18 வயது வரை கொண்ட 26 இளம் பெண்களின் உடல்களை மீட்டுள்ளனர். அந்தப் பெண்கள் நைகர் மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனவும் லிபியா வழியாக ஐரொப்பிய நாடுகளுக்குச் செல்ல இந்த ஆபத்தான பாதையில் பயணித்திருக்கலாம் எனவும்நம்பப்படுகிறது.

ஆட்கடத்தல் தொடர்பாக எகிப்து மற்றும் லிபியாவைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இளம் பெண்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையின் மூத்த அதிகாரி லோரனா சிகோட்டி தெரிவித்துள்ளார்.

மரணத்துக்கான உண்மையான காரணம் அறியப்படாத நிலையில் இறந்துபோன இளம் பெண்களின் உடல்கள் பிரேத பரிசோனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.