
Pathivu | Tamil Win | IBC Tamil | Vakeesam | MaatraM | Tamil Diplomat | PonguThamiL | SamaKalam
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அனைத்தும் சீனாவுக்கே சாதகமாக அமைந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான தற்போதைய பா.ஜ.க அரசின் பொருளாதாரத் திட்டங்கள் அனைத்திலும் சீனாவே இலாபம் பெறுகின்றது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அகமதாபாத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மன்மோகன் சிங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், சீனாவின் ஏற்றுமதி இந்த ஆண்டில் அதிகரித்துள்ளது. குஜராத் போன்ற மாநிலங்களில் பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி ஆகியன சிறு வணிகர்களைப் பாதிக்கின்றது. எனவே பணமதிப்பு நீக்கம் என்பது இந்தியப் பொருளாதாரம் மற்றும் ஜனநாயகத்தில் கறுப்பு தினம் ஆகும். புல்லெட் ரயில் திட்டமானது பிரதமர் மோடி தன் பெருமையைப் பறைசாற்றுவதற்;காக் கொண்டுவரப்பட்டதாகும் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.