BOILING EARTH

இன்னும் 600 ஆண்டுகளில் பூமி தீப்பந்தாக மாறும் அபாயம்


பூமி தொடர்ந்து வெப்பமயமாகிக் கொண்டே இருந்தால் இன்னும் 600 ஆண்டுகளில் அதாவது 2600ஆம் ஆண்டில் பூமி கொளுந்து விட்டு எரியும் நெருப்புப் பந்து போன்று மாறும் என விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பீஜிங்கில் நடந்த அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு உரையாற்றுகையில், பூமியில் மக்கள் தொகைப் பெருக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதற்கேற்ப எரிபொருட் தேவையும் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக பூமி தொடர்ந்தும் வெப்பமாகிக் கொண்டு வருகிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் இன்னும் 600 ஆண்டுகளில் பூமி கொளுந்து விட்டு எரியும் நெருப்புப் பந்து போன்று மாறும். இதனால் பூமியில் உயிரினங்கள்; வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டு அனைத்தும் அழியும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அவர் தனது உரையில், மனிதர்கள் நினைத்தால் இன்னும் 10 இலட்சம் ஆண்டுகளுக்கு உயிர் வாழ முடியும். மனிதர்கள் உயிர் வாழ சூரிய மண்டலத்துக்கு அருகே உள்ள அல்பா சென்ரோரி துணைக் கிரகம்தான் சிறந்தது. இது பூமியில் இருந்து 400 கோடி மைல் தொலைவில் உள்ளது. செவ்வாய்க் கிரகத்துக்கு உள்ள தூரத்தைவிட இது குறைந்த தூரம் ஆகும். இந்தக் கிரகத்துக்குச் சிறிய விமானத்தில் ஒரு வாரத்துக்குள் செல்ல முடியும். எனவே அதற்கான ஏற்பாடுகளை இன்னும் 20 ஆண்டுகளில் செய்து முடித்துவிடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.