un-in

நிவாரணப் பணிகளுக்காக இந்தியா ஐ.நாவுக்கு 1,650 கோடி ரூபா நிதி வழங்குகிறது


புயலால் பாதிக்கப்பட்ட டொமினிக்கா, ஆன்டிகா மற்றும் பார்புடா உள்ளிட்ட 7 பசுபிக் தீவுகளில் ஐ.நா மேற்கொள்ளவுள்ள நிவாரணப் பணிகளுக்கு 10 கோடி டொலர் (சுமார் 1,650 கோடி ரூபா) நிதியளிக்க உள்ளதாக ஐ.நாவுக்கான இந்தியத் துணைத் தூதுவர் அஞ்சனி குமார் தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டின் ஐ.நா மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான நிதி சேர்ப்புக் கூட்டம் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்பேதே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், இந்தியா – ஐ.நா மேம்பாட்டு நிதி என்ற பெயரில், இந்த நிதி பல ஆண்டுகளுக்குப் பிரித்து அளிக்கப்படும். உலகம் முழுவதும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான போதிய நிதியாதாரம் ஐ.நாவுக்கு இருக்க வேண்டும் என்பதில்; இந்தியா உறுதியுடன் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.