ZIMBABWEPOLITICSMILITARY.jpeg.CROP.promo-xlarge2

சிம்பாவேயில் ஜனாதிபதியை சிறைபிடித்து அதிகாரத்தைக் கைப்பற்றியது இராணுவம்


ஆபி;ரிக்க நாடான சிம்பாவேயில் ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளது. 1980-ம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக இருக்கும் முகபே மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பாக உள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

சிம்பாவேயில் ராபர்ட் முகபே ää1980-ம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார். அதிகாரத்தை தனது வசம் கொண்டு வர முயற்சிப்பதாக கூறி அந்நாட்டு துணை ஜனாதிபதி எம்மர்சன் நாங்காவாவை கடந்த வாரம் முகபே பதவி நீக்கம் செய்தார்.
இதனால்ää ஆளும் ஷானு – பி.எப் கட்சியில் பிளவு ஏற்பட்டது. இராணுவத் தலைமை தளபதி ஜெனரல் சிவெங்காää நீக்கப்பட்ட துணை ஜனாதிபதி நாங்காவாவுக்கு ஆதரவாக நின்றார். இதனால்ää அந்நாட்டு அரசியலில் குழப்பநிலை ஏற்பட்டது.

இந்நிலையில்ää உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை தலைநகர் ஹரரேவை இராணுவ பீரங்கிகள் சுற்றி வளைத்தன. அதிகளவிலான இராணுவ வீரர்கள் ஆயுதங்களுடன் தலைநகரை சுற்றி குவிக்கப்பட்டிருந்தனர். அப்போதுää துப்பாக்கி மற்றும் பீரங்கிகளால் சுடும் சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. அந்நாட்டு அரசு ஊடக தலைமையகத்தையும் இராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.
பாராளுமன்றம் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களையும் படிப்படியாக இராணுவம் முற்றுகையிட்டுää தன்வசம் கொண்டு வந்தது.
ஜனாதிபதி மாளிகையை எப்போது வேண்டுமானாலும்ää இராணுவம் முற்றுகையிடலாம் என்ற நிலை நீடித்து வந்த நிலையில்ää ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியதாக சர்வதேச ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
‘அரசை கைப்பற்றும் நோக்கமில்லை’ என இராணுவ செய்தி தொடர்பாளர் முன்னர் கூறியிருந்தார். குற்றவாளிகளை மட்டுமே இராணுவம் குறிவைத்துள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி முகபே மற்றும் அவரது குடும்பத்தினர் இராணுவத்தின் கண்காணிப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கிடையேää ‘ரத்தம் சிந்தாமல் நடைபெற்ற மாற்றம்’ என ஆளும்கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
சிம்பாவேயில் குழப்பமான சு10ழ்நிலை நிலவுவதால் தங்களது நாட்டவர்கள் வெளியே செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படி அமெரிக்கர்ää பிரிட்டன் மற்றும் இந்தியத்தூதரகங்கள் அறிவுறுத்தியுள்ளன.