pakistan

பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு! குண்டுக்காயங்களுடன் 15 பேரின் சடலங்கள் மீட்பு


பாகிஸ்தானில் புலோடா என்கிற இடத்தில் இன்றுகாலை பொலிஸார் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கிக் குண்டுக் காயங்களுடன் 15 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

அங்கு ஒரு சில ஆவணங்களும் கிடைத்தன.

அவர்கள் 15 பேரும் பாகிஸ்தானில் இருந்து ஈரானுக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்துள்ளனர் என்பது அந்த ஆவணங்கள் மூலம் தெரியவந்தது. இவர்கள் 15 பேரும் மர்மநபர்களால் கடத்தப்பட்டதாக நேற்று முன்தினம் பொலிஸில் வழக்கு பதிவாகியிருந்த நிலையில் இன்று காலை அவர்கள் அனைவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.