japan-1

ஜப்பானில் 20 வினாடிகளுக்கு முன்னதாகப் புறப்பட்ட ரயிலுக்காக மன்னிப்புக் கேட்ட ரயில்வே நிர்வாகம்!


ஜப்பான் நாட்டில் ரயில் ஒன்று வழக்கமாகப் புறப்பட வேண்டிய நேரத்தில் இருந்து 20 வினாடிகளுக்கு முன்னதாகவே புறப்பட்டுச் சென்றதைத்; தொடர்ந்து அந்த ரயிலை இயக்கும் ரயில்வே நிர்வாகம் மன்னிப்புக் கோரியுள்ளது.

ஜப்பான் நாடு நேரம் தவறாமைக்கும், அந்நாட்டு மக்கள் பணிவுக்கும் பெயர் பெற்றவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், குறிப்பிட்ட நேரத்திலிருந்து வெறும் 20 வினாடிகளுக்கு முன்னதாகவே ஒரு ரயில் புறப்பட்டுச் சென்றதற்காக அந்த ரயில்வே நிர்வாகம் மன்னிப்புக் கோரியிருப்பது பரவலாகப் பேசப்பட்டு வருவதோடு, இது பல்வேறு ஊடகங்களிலும் செய்தியாகியுள்ளது.