italy

மனிதர்களுக்கு தலை மாற்று சத்திரசிகிச்சை நடத்தமுடியும்- இத்தாலி வைத்தியர்கள் நம்பிக்கை


சடலத்துக்கு நடந்த தலைமாற்று சத்திரசிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. எனவே, இதே தொழில் நுட்பத்துடன் உயிருடன் வாழும் மனிதர்களுக்கு தலை மாற்று சத்திரசிகிச்சை நடத்தமுடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர் இத்தாலி சத்திரசிகிச்சை நிபுணர்கள்.

ரஷ்யாவைச் சேர்ந்த வெலேரி ஸ்பிரிதி நோவ் என்பவருக்கு தலைமாற்று சத்திரசிகிச்சை நடத்தப்போவதாக இத்தாலியைச் சேர்ந்த வைத்தியர் செர்ஜியோ கனோவெரா அறிவித்தார்.

இதன் மூலம் முதன் முறையாக தலைமாற்று சத்திரசிகிச்சை நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கான சோதனை முயற்சிகளில் கனோவெரா ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் தற்போது ஒரு சடலத்துக்கு தலைமாற்று சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
வைத்தியர் செர்ஜியோ கனாவெரோ தலைமையிலான குழுவினர் இந்த சத்திரசிகிச்சையை செய்துள்ளனர்.

சுமார் 18 மணி நேரம் இந்த சத்திரசிகிச்சை நடத்தப்பட்ட போது புது விதமான தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தண்டுவடம், நரம்புகள் மற்றும் இரத்த நாளங்கள் அனைத்தும் அதி நவீன தொழில் நுட்பத்துடன் தலையுடன் பொருத்தப்பட்டுள்ளது.
இச்சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதே தொழில் நுட்பத்துடன் உயிருடன் வாழும் மனிதர்களுக்கும் தலை மாற்று சத்திரசிகிச்சை நடத்த முடிவும் என்னு இத்தாலி வைத்திய நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.