Car Bomb Blast Rocks Western Syria Town

சிரியாவில் கார்க் குண்டுத் தாக்குதல் 26 பேர் பலி


சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய கார்க் குண்டுத் தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிரியாவில் அதிபர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளைக் கையகப்படுத்தித் தங்களது ஆதிக்கத்தின் கீழ் நிர்வகித்து வருகின்றனர்.

இது தவிர, ஐ.எஸ் தீவிரவாதிகளும் சில பகுதிகளைக் கைப்பற்றித் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்தக் குழுக்களை வேட்டையாட அமெரிக்க விமானப்படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாகப் போரிட்டு வருகின்றன.

இந்நிலையில், சிரியாவின் டேர் எஸ்சர் மாகாணத்தில் பொதுமக்கள் கூடியிருந்த இடத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கார்க் குண்டு வெடிப்பு மூலம் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அங்குள்ள மனித உரிமைகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.