JUPITER

வியாழன் கிரகத்தில் கடும் புயல் வீசியுள்ளது என நாசா அனுப்பிய ஜீனோவால் கண்டுபிடிப்பு


வியாழன் கிரகத்தில் கடும் புயல் வீசியுள்ளது என நாசா அனுப்பிய ஜீனோ எனப்படும் விண்கலம் கண்டறிந்துள்ளது.  வியாழன் கிரகத்தில் ஆய்வு செய்ய அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் ஜீனோ என்ற விண்கலத்தை அனுப்பி வைத்துள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த புகைப்படக் கருவி வியாழன் கிரகத்தில் ஏற்படும் பருவ நிலை மாற்றம் மற்றும் தட்ப வெட்ப நிலைப்பாடுகளைப் புகைப்படம் எடுத்துப் பூமிக்கு அனுப்பி வருகிறது.

சமீபத்தில் ஜீனோ விண்கலம் எடுத்து அனுப்பிய புகைப்படத்தில் வியாழன் கிரகத்தில் கடும் புயல் வீசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது இக்கிரகத்தின் வடபுலத்தில் ஏற்பட்டுள்ளது.

இப்புகைப்படம் கடந்த ஒக்ரோபர் 24ஆம் திகதி அனுப்பப்பட்டுள்ளது. அப்போது விண்கலம் வியாழன் கிரகத்தின் மேகக் கூட்டங்களின் மீது 10 ஆயிரத்து 108 கிலோ மீற்றர் தூரத்தில் பறந்தது. புகைப்படத்தில் வியாழன் கிரகத்தில் புயல் வீசும்போது மேகக் கூட்டங்கள் கலைந்தும் கரு மேகங்கள் திரண்டும் காணப்பட்டன என்றும் தெரிவிக்கப்படுகிறது.