somalia - america attack

சோமாலியா தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்க இராணுவம் வான்வழித் தாக்குதல்


சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடி~p அருகே தீவிரவாதிகளின் முகாம் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 100 இற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

சோமாலியா நாட்டின் பல பகுதிகளில் அல் குவைதா ஆதரவு பெற்ற உள்நாட்டுத் தீவிரவாதிகளான அல் ~பாப் குழுக்கள் ஏராளமாக இயங்கி வருகின்றன. சோமாலியா அரசைக் கவிழ்த்துவிட்டு மிகவும் கண்டிப்பு நிறைந்த இஸ்லாமியச் சட்டங்களின் அடிப்படையில் ஆட்சியை நிறுவ வேண்டும் என்பது இவர்களின் நோக்கமாக உள்ளது.

உள்நாட்டு இராணுவ வீரர்கள் மீது அவ்வப்போது அதிரடியாகத் தாக்குதல் நடத்திவரும் இந்தத் தீவிரவாதிகள் மத்திய ஆபிரிக்காவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவரும் பன்னாட்டு அமைதிப் படையினரையும் தாக்கி வருகின்றனர்.

இந்நிலையிலேயே, சோமாலியா நாட்டுப் படைகளுடன் இணைந்து அமெரிக்க இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் 100 இற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என ஆபிரிக்காவில் உள்ள அமெரிக்கக் கூட்டுப்படையினர் தெரிவித்துள்ளனர்.