iraq-mosul-abnews24_6405

ஈராக்கில் கார்க் குண்டுத் தாக்குதல் 21 பேர் உயிரிழப்பு


ஈராக் நாட்டின் தலைநகரான பக்தாத்தின் வடபகுயில் உள்ள கிர்குக் பகுதியில் நேற்று நடந்த கார்க் குண்டுத் தாக்குதலில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர்.

ஈராக் நாட்டின் தலைநகரான பக்தாத்தின் வடக்கே சுமார் 240 கிலோ மீற்றர் தூரத்தில் கிர்குக் என்ற பெரு நகரம் உள்ளது. இப்பகுதியில் குர்த், அராபியர்கள், துருக்மேனிஸ்தான் பகுதியைச் சேர்ந்த மக்கள் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். முன்னர் குர்திஸ்தான் போராளிகள் வசமிருந்த இப்பகுதியைக் கடந்த ஒக்ரோபர் மாதம் ஈராக் படைகள் கைப்பற்றின.

இந்நிலையில், அங்கு நடைபெற்ற குண்டுத்தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன. படுகாயங்களுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.