vivegamsiva2

அஜித் – சிவா கூட்டணியில் உருவாகும் விசுவாசம்


சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்திற்கு விசுவாசம் என்று பெயர் வைத்துள்ளனர்.

விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் என்றும், தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஏற்கனவே அஜித் – சிவா கூட்டணி வீரம், வேதாளம், விவேகம் படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

இந்நிலையில் 4-வது முறையாக இணைந்துள்ள இந்த கூட்டணி V சென்டிமெண்டிலேயே பெயர் வைத்துள்ளது. அதன்படி விசுவாசம் என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் படத்தின் பெயர் வந்த 10 நிமிடத்தில் உலகம் முழுவதும் 4வது இடத்திலும், தேசிய அளவில் முதலாவது இடத்திலும் விசுவாசம் டிரண்ட் ஆகியுள்ளது.