namitha_09368

காதலர் வீராவை கரம்பிடித்தார் நமீதா


நடிகை நமீதா – வீரேந்திர சவுத்திரி திருமணம், திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள ஹரேராமா ஹரே கிருஷ்ணா கோயிலில் இன்று காலை 5.30 மணிக்கு நடைபெற்றது.

நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்தத் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

திருமணத் திகதிகுறித்து முன்னரே அறிவித்திருந்த நமீதா, “நானும் வீராவும் நல்ல நண்பர்கள். நட்பு காதலாகி, காதலுக்குப் பின் உறவினர்களின் சம்மதத்தோடு நடைபெறும் திருமணம் இது” எனக் குறிப்பிட்டிருந்தார்.