earth

பூமி தட்டையானது என்பதை நிரூபிக்க கலிபோர்னியாவைச் சேர்ந்த மைக் ஹீக்ஸ் முயற்சி


கலிபோர்னியாவைச் சேர்ந்த மைக் ஹீக்ஸ் புதிய ரொக்கெட் ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்த ரொக்கெட் மூலம் பூமி தட்டையாக உள்ளதை நிரூபிக்கப் போகின்றேன் என அவர் கூறியுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மைக் இதுபோன்று ரொக்கெட் ஒன்றைச் செய்து அதில் பயணம் செய்தார். ரொக்கெட் சிறிது உயரத்துக்குச் சென்ற பின் கீழே விழுந்தது. அதன் பின் இரண்டாவது முயற்சியாக இந்த ரொக்கெட்டை அவர் நாளை சனிக்கிழமை செலுத்தவுள்ளார்.

பூமி தட்டையானது என்பதை நிரூபிக்கச் சொந்தமாகத் தயாரித்த ரொக்கெட்டில் பறக்க உள்ளமை அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த ரொக்கெட்டை ஆயிரத்து 800 அடி உயரத்துக்குச் செலுத்தப் போகின்றேன். மேலே சென்றவுடன், பூமியின் அமைப்பைப் படம் எடுத்து அது தட்டையாக இருப்பதற்கான ஆதாரங்களைச் சேகரித்து வரவுள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.