Blast

உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வகையில் மூன்று நாட்கள் துக்க தினம் அனுஷ்டிப்பு


எகிப்தில் மசூதியில் நடந்த கொடூரத் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வகையில் மூன்று நாட்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகளில் ஈடுபட்ட பொதுமக்களை இலக்கு வைத்து, பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 305 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாக்குதல்கள் சம்பவத்திற்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்தத் தாக்குதலுக்கு உலகத் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

இதுவொரு கோழைத்தனமான செயல் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரித்தானிய பிரதமர் இரங்கல்களை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எகிப்து நாட்டு ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மூன்று நாட்கள் துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றது.