america

வொஷிங்டன் வங்கிக் கொள்ளை முயற்சி 86 வயது மூதாட்டி சிக்கினார்


வொஷிங்டன் வங்கிக் கொள்ளை முயற்சி 86 வயது மூதாட்டி சிக்கினார்குண்டு இல்லாத வெற்றுத் துப்பாக்கியை காண்பித்து அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் உள்ள வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற 86 வயது மூதாட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

வொஷிங்டனில் உள்ள வங்கியில் காலையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது அங்கு 86 வயது மூதாட்டி உள்ளே வந்துள்ளார்.

நடக்க முடியாத நிலையில் இருந்த அவர் ‘வோக்கிங் ஸ்டிக்’ வைத்தே நடந்து வந்துள்ளார்.

அப்போது திடீரென தான் வைத்திருந்த ஒரு துப்பாக்கியை காட்டி அனைவரையும் மிரட்டியுள்ளார். அதனால் வங்கியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

உடனே பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் விரைந்து வந்து மூதாட்டியை கைது செய்தனர். அவர் விலங்கு வேட்டைக்கு பயன்படுத்தும் துப்பாக்கி வைத்திருந்தார். அதை பெலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

அப்போது அவர் மயங்கி வீழ்ந்துள்ளார். முதலுதவி சிகிச்சைக்குப்பின் அவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது தான் வைத்திருந்தது குண்டுகள் நிரப்பாத வெற்று துப்பாக்கி என அவர் தெரிவித்தார். அதே போன்று துப்பாக்கியில் குண்டுகள் இல்லை. அவரது கைப்பையிலும் குண்டுகள் காணப்படவில்லை.

இச்சம்பவம் நடப்பதற்கு முதல்நாள் மூதாட்டி இதே வங்கிக்கு வந்துள்ளார். அப்போது அவரிடம் இருந்து 400 டொலர் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதை மீண்டும் திரும்ப பெறவே கொள்ளையில் இறங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.