cnn hero

சி.என்.என். ஹீரோ விருது பட்டியலில் இந்தியர்கள்


அமெரிக்காவைச் சேர்ந்த, சி.என்.என்., என்ற, தொலைக்காட்சி சார்பில், ஒவ்வொரு ஆண்டும், சிறந்த சாதனையாளர்களுக்கு, சி.என்.என்., ஹீரோ விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான, சி.என்.என்., ஹீரோ விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 10 பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமீர் லகானி, மோனா படேல் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
.
ஆசிய நாடான கம்போடியாவில் சவர்க்காரம் என்பது ஓர் ஆடம்பரப் பொருளாக இருப்பதை அறிந்த சமீர் லகானி, ‘ஒன்லைன்’ குழுவை அமைத்தார்.

அதன்படி, ஹோட்டல்களில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் சவர்க்காரங்களை சேகரித்து, அவற்றை துாய்மை செய்து, புதிய வடிவில் சவர்க்காரங்களை உருவாக்கி, அதை கம்போடியா மக்களுக்கு வழங்கும் சேவையை, 2014ல் ஆரம்பித்தார்.

கல்லுாரியில் படிக்கும் போதே அவர் இதை ஆரம்பித்தார். இதுவரை, 6.5 லட்சம் மக்களுக்கு சவர்க்காரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மோனா படேல், கல்லுாரியில் படிக்கும் போது, 1990ல் நடந்த விபத்தில், காலை இழந்தார். ஆனால், மனந்தளராத அவர், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சாரா அமைப்பை உருவாக்கினார்.

இந்த அமைப்பின் மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கு படிப்பு, வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறார். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன், ஊக்குவிக்கும் வகையிலான ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.