american park

பூங்காவில் உறங்கும் எரிமலை


அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள பிரபல பூங்காவான ஜேலோ ஸ்டோனில் (yellow stone), அசிட் குளம் ஒன்று அமைந்துள்ளது. இதில் உள்ள உறங்கு நிலை எரிமலை பலரையும் மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த பூங்காவானது 15 சதவீதம் நீரால் சூழப்பட்டதாகும். அதுமட்டுமன்றி இங்கு பனிகளால் சூழப்பட்ட காடுகளும் காணப்படுகின்றன. மேலும் ஜனவரி மாத காலத்தில் வெறும் ஒன்பது டிகிரி வெப்பநிலை மட்டுமே காணப்படுகிறது. ஆனால் ஜூலை மாதத்தில் எண்பது டிகிரி வெப்பமாகக் காணப்படுகிறது.

உறங்கும் எரிமலையுள்ள இந்தப் பகுதியானது புவியியல் ரீதியிலும் ஆச்சரியம் மிக்கதாகக் காணப்படுகின்றது. “சில எரிமலை அமைப்புகள் ஒரு நிரந்தர நிலைமையில் இருப்பதாகவே தோன்றுகின்றன, யெலோஸ்டோன் அவ்வாறான ஒன்றாகும்” என்று அமெரிக்க புவியியல் ஆய்வுகளின் யெலோஸ்டோன் எரிமலை வானியல் ஆய்வாளரான மைக்கேல் போலந்து கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் இவ் அழகிய அதிசயத்தை சுற்றுலாப் பயணிகள் கண்டு கழிப்பதற்காக மிக நீண்டதொரு இரும்புப் பாலமொன்று அமைக்கப்பட்டு உரிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் பல சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி இக்குளத்தை எட்டிப் பார்க்கும் முயற்சியில் உயிரையும் மாய்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.