jallikaddu

மலேசியாவிலும் தமிழர் பாரம்பரியம் பேணப்படுகிறது


தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது.

இம்முறை மலேசியாவில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் 7ஆம் திகதி மலேசியாவில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 20 காளைகள் பங்கேற்கின்றன.

இதற்காக தமிழகத்தைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு பயிற்சியாளர்கள் மலேசியா சென்றுள்ளனர். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த 15 மாவட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.