hansika

சம்பளத்தைக் குறைத்தார் ஹன்சிகா


அஜித்தை வைத்து படம் தயாரிக்கும் எண்ணத்தோடு வந்த ஆரா சினிமாஸ் நிறுவனம் அவரது கால்ஷீட்டுக்காக காத்திருக்கும்படி சொல்லப்பட்டதால் விநியோகத்துறையில் இறங்கியது. பல படங்களை வாங்கி வெளியிட்ட ஆரா சினிமாஸ், அடுத்தப்படியாக பலூன் படத்தை ரிலீஸ் செய்கிறது.

இதையடுத்து, முதல்கட்டமாக ‘டார்லிங்’, “எனக்கு இன்னொரு பேர் இருக்கு” ஆகிய படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா ஹீரோவாக நடிக்கும் படத்தை தயாரிக்கிறது. இந்தப்படத்தில் ஹன்சிகா கதாநாயகியாக நடிக்க்கிறார். அதர்வா, ஹன்சிகாவுடன் ‘யோகி பாபு காமெடியானாக நடிக்கிறார்.

சில வருடங்களுக்கு முன் ஒரு கோடிவரை சம்பளம் வாங்கிய ஹன்சிகா இந்த படத்தில் தனது சம்பளத்தை குறைத்து நடிப்பதாக கூறப்படுகிறது.