pon vannan

பதவி துறந்தார் நடிகர் பொன்வண்ணன்!


நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவியில் இருந்து பொன்வண்ணன் விலகுவதாக அறிவித்துள்ளார்.

நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாரும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான விஷால் ஆர்.கே.நகர் தேர்தலில் மனுத்தாக்கல் செய்யப்போவதாகத் தகவல்கள் வந்ததிலிருந்து சினிமா உலகைச் சேர்ந்த சிலர் விஷாலுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி வந்தனர்.

இதற்கிடையில் நேற்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுக்குழு கூட்டம் ஆரம்பித்த சில மணி நேரங்களில் நிறுத்தப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், நடிகர் சங்கத்தின் துணைத் தலைவரான நடிகர் பொன்வண்ணன், சங்கப் பொறுப்பில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

விஷால் தலைமையிலான பாண்டவர் அணியில் பொன்வண்ணன் முக்கிய ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.