indonesia

170 மில்லியன் டொலர் ஊழல்: பதவி ராஜினாமா – செட்யா நோவான்ட்


இந்தோனேசியாவில் தேசிய மின்னியல் அடையாள அட்டை திட்டத்தின் மூலம் அரசுக்கு 170 மில்லியன் டொலர் இழப்பு ஏற்படுத்திய விவகாரத்தில் பாராளுமன்ற சபாநாயகர் செட்யா நோவான்ட்டோவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விடயம் தொடர்பாக அந்நாட்டு ஊழல் ஒழிப்பு வாரிய அதிகாரிகளால் கடந்த மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.

இந் நிலையில் ஊழல் வழக்கை எதிர்கொள்ள தான் தயாராக இருப்பதாகவும் பாராளுமன்ற சபாநாயகராக தொடர்ந்து பதவிவகிக்க அனுமதிக்குமாறும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கு அவர் கடிதம் அனுப்பியிருந்தார்.

இந் நிலையில் பாராளுமன்ற சபாநாயகர் செட்யா நோவான்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு வெளியான ஊழல் பட்டியலில் 176 நாடுகளில் 90 ஆவது நாடாக இந்தோனேசியா அறிவிக்கப்பட்ட நிலையில் அந் நாட்டு பாராளுமன்றத்தில் அதிக ஊழல்கள் நிறைந்திருப்பதாக சர்வதேச ஊழல் தடுப்பு கண்காணிப்பு மையம் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது