sawdi

சவுதி அரேபிய பெண்களும் கார் ஓட்டலாம்


சவுதி அரேபியாவில் ஷரியத் சட்டம் கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே அங்கு பெண்களுக்கு கார் ஓட்டுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1990 ஆம் ஆண்டில் இருந்தே பெண்ணுரிமை சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளன. தடையையும் மீறி கார் ஓட்டிய பெண்களை கைது செய்து அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் சவுதி அரேபிய அரசு நீண்டகால கோரிக்கையை ஏற்று குறித்த தடையை நீக்கியுள்ளது . அதை தொடர்ந்து எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு யூன் முதல் பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளித்து கடந்த செப்டெம்பர் மாதம் மன்னர் முகம்மது பின் சல்மான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது காரை தொடர்ந்து மோட்டார் வண்டி மற்றும் லொரி ஓட்டவும் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சவுதி அரேபியா நாட்டின் போக்குவரத்து துறை இயக்குனர் ஜெனரல் நேற்று வெளியிட்டுள்ளார்.

மேலும் பெண்கள் ஓட்டும் வாகனத்தின் இலக்க தகடுகள் வேறு விதமாக இருக்கும். இதேபோல் போக்குவரத்து விதிகளை மீறும் பெண்கள் மற்றும் விபத்துக்களை எற்படுத்தும் பெண் ஓட்டுநர்களை தண்டிப்பதற்கும் அபராதம் விதிப்பதற்கும் பெண்களால் நிர்வகிக்கப்படும் தனி அமைப்பு உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.