k,s ravikumar

ரவிக்குமாரின் ஜெய்சிம்ஹா திரைப்படம் ஜனவரி 12இல் வெளியாகும்


ரஜினி நடித்த லிங்கா படம் தோல்வியடைந்ததால், தொடர்ந்து கமர்சியல் ஹிட் படங்களை கொடுத்து வந்த கே.எஸ்.ரவிக்குமாரின் மார்க்கெட் குறைந்தது. அதையடுத்து கன்னட நடிகர் சுதீப்பை வைத்து முடிஞ்சா இவனை புடி என்ற படத்தை இயக்கினார். அந்த படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இப்போது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் ஜெய்சிம்ஹா என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார்.

மேலும், ஜனவரி 12-ந்தேதி வெளியாகும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த பத்து நாட்களாக துபாயில் நடைபெற்று வந்தது. பால கிருஷ்ணா-நயன்தாரா சம்பந்தப்பட்ட இரண்டு டூயட் பாடல் காட்சி படமாக்கப்பட்டதோடு படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. அதோடு, இந்த படத்தையும் தனது பாணியிலேயே கமர்சியல் மசாலாவாக இயக்கியபோதும், அரசியல் விசயங்களையும் இணைத்து அதிரடி மசாலாப்படமாக இயக்கியிருக்கிறாராம் கே.எஸ்.ரவிக்குமார்.