indonesia

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் – 6.5 ரிக்டராக பதிவு


இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்தோனேஷியாவின், ஜாவா தீவில், நேற்று முன்தினம் நள்ளிரவு, பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.5 ரிக்டராக பதிவானது. இந்த நிலநடுக்கம், ஜாவா தீவின், கடற்கரை நகரமான, சிபாதுஜா நகரை மையமாக வைத்து நிகழ்ந்தது. நிலநடுக்கம் ஏற்பட்டதால், பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி, ஒரு பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்; ஏழு பேர் காயமடைந்தனர். இது குறித்து, அந்நாட்டு தேசிய பேரிடர் மீட்பு குழு தலைவர், சுதோபோ பூர்வோ நுகிரோஹோ கூறியதாவது:

நிலநடுக்கத்தால், மருத்துவமனை கட்டடங்களும் இடிந்து விழுந்து உள்ளதால், அங்குள்ள நோயாளிகள், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மேற்கு ஜாவா மற்றும் மத்திய ஜாவா பகுதிகளில், நுாற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்து உள்ளன. நிலநடுக்கத்தை அடுத்து, கடலோர பகுதிகளில், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என அவர் கூறினார்.