Yothidam-1

இன்றைய ராசிபலன் – 19.12.2017


  • மேஷம்

    மேஷம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக் கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். நீண்ட நாள் பிரச்னைகளை தீர்ப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். வாக்குறுதியை நிறைவேற்ற போராட வேண்டி வரும். வியாபாரத் தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் தானுண்டு தன் வேலை யுண்டு என்றிருக்கப்பாருங்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போங்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். வாகனத்தை சரி செய்வீர்கள். சகோதரங்கள் உதவு வார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

  • கடகம்

    கடகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோ கத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். நினைத்தது நிறைவேறும் நாள்.

  • கன்னி

    கன்னி: நட்பால் ஆதாயம் உண்டு. தாய்வழி உறவினர் களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நீண்ட நாட்க ளாக சந்திக்க நினைத்த ஒருவரை சந்திக்கலாம். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

  • துலாம்

    துலாம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர் கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீ ர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: குடும்பத்தில் ஆதரவுப் பெருகும். அழகு, இளமை கூடும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். நட்பு வட்டம் விரியும். வியா பாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப் பார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

  • தனுசு

    தனுசு: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில வேலைகளை உங்கள் பார்வை யிலேயே முடிப்பது நல்லது. சாதாரணமாக பேசுவதைக் கூட சிலர் குதர்க்கமாக புரிந்துக் கொள்வார்கள். பூராடம் நட்சத்திரக்காரர்கள் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் சில சூட்சுமங் களை கற்றுக் கொள்வீர்கள். சிக்கனம் தேவைப்படும் நாள்.

  • மகரம்

    மகரம்: குடும்பத்தில் விட்டுகொடுத்து போவது நல்லது. யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். உறவினர், நண்பர்கள் சிலர் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல் கள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: கணவன்-மனைவிக் குள் மனம் விட்டு பேசுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.

  • மீனம்

    மீனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர் கள், நண்பர்கள் ஆதரவாக பேசத் தொடங்கு வார்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.