WhatsApp-to-share-users-mobile-numbers-with-Facebook-799x420

வாட்ஸ் அப் பேஸ்புக்கில் புதிய வசதிகள்


 

இன்று  ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தாதவர்கள் இல்லையென்றே சொல்லலாம். அந்த அளவுக்கு உலக மக்களை வாட்ஸ் அப்,வியாபித்துள்ளது. வணிக நிறுவனங்களும் பயன்படுத்தும் வகையில் வாட்ஸ் அப் பிஸ்னஸ் என்ற செயலி அறிமுகமாகியுள்ளது. ஆட்டோ ரெஸ்பான்ஸ் பிஸ்னஸ் ப்ரொஃபைல்களை இந்த செயலியில் உருவாக்கி பயன்படுத்த முடியும். வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலில்,தனிநபர் கணக்கு மற்றும் பிஸ்னஸ் கணக்கு என தனித்தனியாக பயன்படுத்த முடியும்.

பேஸ்புக்கில் தேவையற்ற மற்றும் விரும்பாத பதிவுகளை தடுக்கும் வசதி அறிமுகமாகியுள்ளது.ஸ்னூஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வசதி மூலம் ஒரு நாள் முதல் 30 நாட்கள் வரை தேவையற்ற பதிவுகளை தவிர்க்க முடியும். குறிப்பாக குறூப்களில் வரும் தேவையில்லாத நோடிஃபிகேஷன்களையும் தடுக்கலாம்.