oviya-1

பிக்பாஸ் ஓவியா டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடுவாராம்


பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் ஓவியா. இவர் தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா 4-ம் பாகத்தில் ஹீரோயினாக நடித்து வருகின்றார்.

இந்நிலையில் ஓவியா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தாரே தவிர, அவர்களுடன் கலந்துரையாடவில்லை.

இதனால் முதன் முறையாக டுவிட்டரில் ரசிகர்களுடன் வரும் 20-ம் தேதி இரவு 8 மணிக்கு கலந்துரையாடவுள்ளார், ரசிகர்களே ஓவியாவுடன் பேச ஆயத்தமாக இருங்கள் என்று தமிழக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.