Yothidam-1

இன்றைய ராசிபலன் – 27.12.2017


 • மேஷம்

  மேஷம்: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தாழ்வுமனப் பான்மை வரக்கூடும். வழக்கில் நிதானம் அவசியம். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோ கத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து விலகும். இரவு 8.39 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் போராடி வெல்லும் நாள்.

 • ரிஷபம்

  ரிஷபம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். மனைவிவழியில் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். இனிமையான நாள்.

 • மிதுனம்

  மிதுனம்: தன்னம்பிக்கை யுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்த வர்கள் உறுதுணையாக இருப்பார்கள். நெருங்கியவர்களுக் காக மற்றவர்களின் உதவியை நாடுவீர் கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கை யாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

 • கடகம்

  கடகம்: உணர்ச்சிப்பூர்வ மாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசு வீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சாதிக்கும் நாள்.

 • சிம்மம்

  சிம்மம்: இரவு 8.39 மணி வரை சந்திராஷ்டமம் தொடர் வதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

 • கன்னி

  கன்னி:  கணவன்-மனைவிக் குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதிய வர்கள் அறிமுகமாவார்கள். வீட்டில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழக்கூடும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். உத்யோ கத்தில் உங்களின் திறமையை வெளிப் படுத்த நல்ல வாய்ப்பு வரும். இரவு 8.39 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கு வதால் நிதானம் தேவைப்படும் நாள்.

 • துலாம்

  துலாம்: கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். வீட்டை விரிவுப்படுத்தி கட்ட முடிவெடுப்பீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பழைய சரக்கு கள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். திடீர் யோகம் கிட்டும் நாள்.

 • விருச்சிகம்

  விருச்சிகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருப் பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெரு கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.

 • தனுசு

  தனுசு: வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். பண விஷயத் தில் கறாராக இருங்கள். கலைப் பொருட்கள் வாங்கு வீர்கள். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

 • மகரம்

  மகரம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங் களின் நட்பு கிட்டும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். உற்சாக மான நாள்.

 • கும்பம்

  கும்பம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிக மாகும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

 • மீனம்

  மீனம்: இரவு 8.39 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மறதி, சோம்பல் வந்து நீங்கும். சிலர் உங்களிடம் நயமாக பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண் டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதா சீனப்படுத்த வேண்டாம். போராட்டமான நாள்.